உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 10 May 2017 8:30 PM GMT (Updated: 2017-05-10T23:35:37+05:30)

மேற்கு மொசூலில் ஈராக் படைகள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தளபதி அபு அயோப் அல் ‌ஷமி கொல்லப்பட்டார்.

* தெற்கு சூடான் நாட்டில் வலிமை வாய்ந்த ராணுவ தளபதி பால் மாலோங்கை அதிபர் சல்வா கீர் திடீரென பதவியை விட்டு நீக்கி விட்டார். புதிய தளபதியாக ஜேம்ஸ் அஜங்கோ மாவுத் நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் நகரில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* அமெரிக்காவில் சியாட்டில் நகர மேயர் எட் முர்ரே மீது பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அவர் மீண்டும் மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

* சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள அஜாஸ் நகரத்தில் நேற்று நடந்த கார் குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர்.

* ஆப்கானிஸ்தானில் ஹெராத் நகரில் சாலையோர குண்டுவெடிப்பில் சிக்கி 7 அப்பாவி மக்கள் பலியாகினர். பலியானவர்களில் குழந்தைகளும், பெண்களும் அடங்குவர்.

Next Story