ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலை தடுத்த மார்க்ஸ் பள்ளியில் இருந்து ஆசிரியர்களால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்!


ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலை தடுத்த மார்க்ஸ் பள்ளியில் இருந்து ஆசிரியர்களால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்!
x
தினத்தந்தி 16 May 2017 10:22 AM GMT (Updated: 2017-05-16T15:52:09+05:30)

ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலை பெருமளவில் தடுத்து நிறுத்தியவர் பள்ளியில் இருந்து ஆசிரியர்களால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என தெரியவந்து உள்ளது.

லண்டன், 

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய இணையவழி தாக்குதல் ‘டூல்’களை கொண்டு உலகின் சுமார் 150 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பிரச்சினை பெருமளவு சரிசெய்யப்பட்டு வருகிறது. ரான்சம்வேர் இங்கிலாந்து நாட்டில் மருத்துவ துறை பெரிதும் ஸ்தம்பித்தது. பிரச்சனையானது இப்போது சரிசெய்யப்பட்டு வருகிறது. 

ரான்சம்வேர் தாக்குதலை தடுத்து நிறுத்தியவர் 22 வயதாகும் மார்கஸ் ஹட்சின்ஸ், இவரை அந்நாட்டு ஊடகங்கள் மட்டுமின்றி பலதரப்பு பாராட்டி வருகிறது. 

இப்போது சூப்பர் ஸ்டாராக, ஒரு ஹீரோவாக அறியப்பட்டு வரும் மார்க்ஸ் ஆசிரியர்களால் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டர் என தெரியவந்து உள்ளது. ‘ஹீரோ’ பிரிட்டன் கம்ப்யூட்டர் நிபுணர் மார்க்ஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதலை தடுத்து உள்ளார். உலக அளவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான கம்ப்யூட்டர்கள் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்படுவதை மார்க்ஸ் தடுத்து உள்ளார். மார்க்ஸ் தேவான் பகுதியில் உள்ள பள்ளியில் பள்ளி படிப்பை படித்தபோது பள்ளியின் நெட்வோர்க்கை ஹேக் செய்த காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். 

பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக இப்போது மார்க்ஸ் பேசுகையில், ஐயோ! அதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது, சும்மா ப்ராக்ஸி சர்வர்களை கொண்டு பள்ளியின் இன்டர்நெட் கட்டுப்பாட்டை ஹேக்கிங் செய்தேன் அவ்வளவுதான். நான் குற்றத்திற்காக பிடிபட்டேன், அப்போது நான் எதற்காக பிடிக்கப்பட்டேன் என்றுகூட தெரியாது என நகைத்துக் கொண்டே கூறிஉள்ளார். பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்ததை எதுவும் பெரிதாக எடுக்கவில்லை, 2010-ம் ஆண்டே அவர் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் கணினி மீதான அவருடைய காதலைவிட வில்லை.

இப்போது இங்கிலாந்து சைபர் பாதுகாப்பு நிபுணராக உள்ளார். ரான்சம்வேர் தாக்குதலை தடுத்த நான் ஒரு எதிர்பாராத விதமாக ஹீரோவாகி உள்ளேன் என குறிப்பிட்டு உள்ளார். 

ரான்சம்வேர் தாக்குதல் தொடர்பாக மார்க்ஸ் தன்னுடைய அனுபவங்களை "How to Accidentally Stop a Global Cyber Attacks" என்ற தலைப்பில் malwaretech இணையத்தில் கட்டுரையாக வெளியிட்டு உள்ளார்.

இங்கிலாந்தின் தேவான் பகுதியில் வசித்துவரும் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையாக கொண்டு செயல்படும் க்ரிப்டோஸ் லாஜிக் நிறுவனத்திற்காக வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார். “நான் ஒன்றும் ஹீரோ கிடையாது. ஹேக்கிங் நகர்வை தடுக்க சிலர் செய்யும் நடவடிக்கையை போன்று நான் செயல்பட்டேன்,” என கூறிஉள்ளார். ரான்சம்வேர் தாக்குதலை தடுக்க அவர் வடிவமைத்த புரோகிராம் க்ரிப்டோஸ் லாஜிக் நிறுவனத்தில் முதலில் செயல்படுத்தப்பட்டு பயன் அடையப்பட்டது, நிறுவனம் அவரை பாராட்டி உள்ளது. மார்க்ஸின் பாஸ் பேசுகையில், ரான்சம்வேர் மோசமான முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது என கூறிஉள்ளார். 

Next Story