ஆப்கானிஸ்தானில் தேசிய தொலைக்காட்சி நிறுவனம் மீது துப்பாக்கி சூடு தாக்குதல்


ஆப்கானிஸ்தானில் தேசிய தொலைக்காட்சி நிறுவனம் மீது துப்பாக்கி சூடு தாக்குதல்
x
தினத்தந்தி 17 May 2017 8:14 AM GMT (Updated: 2017-05-17T13:44:53+05:30)

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே துப்பாக்கி ஏந்திய சில நபர்கள் அரசு தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் வானொலி நிலையம் மீது இன்று தாக்குதல் நடத்தினர்.

ஜலாலாபாத்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே ஜலாலாபாத் நகர் அமைந்துள்ளது.  இங்கு அந்நாட்டின் அரசுக்கு சொந்தமுடைய தேசிய தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  அதனுடன் வானொலி நிலையமும் அந்த கட்டிடத்திலேயே அமைந்துள்ளது.

இந்நிலையில், அரசு செய்தி தொடர்பு அதிகாரியான அட்டாவுல்லா கோக்யானி என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ஆப்கானிஸ்தானின் தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்ற தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன.  அந்த கட்டிடத்தில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

Next Story