சீனாவின் பட்டுசாலை திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பு இலங்கை வரவேற்பு

சீனாவின் பட்டுசாலை திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் நிலையில் இலங்கை வரவேற்பு தெரிவித்து உள்ளது.
கொழும்பு,
சீனாவின் பட்டு சாலை திட்டத்தை இலங்கை வரவேற்றுள்ளது. சீனா பட்டுசாலை திட்டத்தை அமல்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் உலக நாடுகளை போக்குவரத்து வசதி மூலம் இணைத்து சீனாவின் வர்த்தகத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதற்கான மாநாட்டை சமீபத்தில் பெய்ஜிங்கில் நடத்தியது. அதில் பாகிஸ்தான், ரஷியா, இலங்கை, உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பட்டு சாலை திட்டம் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாநாட்டை இந்தியா புறக்கணித்தது.
ஆனால் சீனாவின் இத்திட்டத்துக்கு இலங்கை வரவேற்பு அளித்துள்ளது. மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை பிரதமர் ரனில்விக்ரமசிங்கே பேசினார்.அப்போது இலங்கையில் சீனா வழங்கி வரும் திட்டங்களை பட்டியலிட்டார். ஹம்பந்தோடா துறைமுகம், மத்லா விமான நிலையம், தெற்கு எக்ஸ்பிரஸ் சாலை போன்ற சிலவற்றை பாராட்டி பேசினார்.
தற்போது பட்டுசாலை திட்டம் செயல்படுத்துவதன் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். மேலும் இந்திய மகாசகுத்திரத்தில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக திகழும் என்றும் கூறினார்.
Related Tags :
Next Story