குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரத்தில் நாளை தீர்ப்பளிக்கிறது சர்வதேச நீதிமன்றம்


குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரத்தில் நாளை தீர்ப்பளிக்கிறது சர்வதேச நீதிமன்றம்
x
தினத்தந்தி 17 May 2017 12:35 PM GMT (Updated: 2017-05-17T18:05:21+05:30)

குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்ததற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

ஹேக்,

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. குல்பூஷண் ஜாதவ்வை காப்பாற்றுவது தொடர்பாக பாகிஸ்தானில் எடுக்கப்படும் நடவடிக்கையில் பலன் இருக்காது என கருதப்பட்ட நிலையில் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடி தற்காலிக தடையை பெற்றது. இவ்விவகாரம் தொடர்பாக இன்று நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.

முதலில் விசாரணையை தொடங்கிய இந்தியா, குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் ‘கேலிக்கூத்தான’ விசாரணையை நடத்தி உள்ளது என்றது. இதனையடுத்து பாகிஸ்தான் தன்னுடைய வாதத்தை முன்வைத்தது. திங்கள் கிழமை வாதங்கள் முடிவடைந்த நிலையில், நாளை( வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு சர்வதேச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கிறது. பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியா வெற்றி பெறுமா? என்பது நாளை மலை தெரிந்துவிடும். 

Next Story