நாய்க்கு மரண தண்டனை: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வித்தியாசமான தீர்ப்பு


நாய்க்கு மரண தண்டனை: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வித்தியாசமான தீர்ப்பு
x
தினத்தந்தி 17 May 2017 12:58 PM GMT (Updated: 2017-05-17T18:28:28+05:30)

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நாய்க்கு மரண தண்டனை அளித்து வித்தியாசமான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


லாகூர்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குழந்தையை கடித்ததற்காக நாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின்  பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகரம் அருகே பாக்கார் என்ற சிறு நகரம் உள்ளது. இந்த நகர சுற்றுவட்டாரப்பகுதியைச்சேர்ந்த ஒரு இடத்தில் சிறுமியை நாய் ஒன்று கடித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, இது குறித்து விசாரணை மேற்கொண்ட அங்குள்ள நகர துணை ஆணையர் ராஜா சலீம் என்பவர் நாய்க்கு மரண தண்டனை விதித்து  உத்தரவிட்டார். சிறுமியை நாய் கடித்துள்ளது. எனவே, அந்த நாய் கொல்லப்பட வேண்டும் என்று ராஜா சலீம் தெரிவித்து மேற்கண்ட வித்தியாசமான தீர்ப்பை அளித்துள்ளார். 

இந்த விசித்திரமான தீர்ப்பை எதிர்த்து நாயின் உரிமையாளர் கூடுதல் துணை ஆணையரிடம் மேல் முறையீடு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் நாய்க்கு எதிராக புகார் அளித்தனர். இதன்பின்னர் ஒருவாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனவே மேலும் தண்டனை விதிப்பது நியாயம் அற்றது என்று நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், எங்கள் செல்லப்பிராணிக்கு நியாயம் கிடைக்க அனைத்து நீதிமன்ற கதவையும் தட்டுவோம் என்று நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டைச்சேர்ந்த ஜியோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

Next Story