ஜப்பான் இளவரசிக்கு திருமணம் அரச அந்தஸ்தை கைவிட்டு காதலரை கரம் பிடிக்கிறார்


ஜப்பான் இளவரசிக்கு திருமணம் அரச அந்தஸ்தை கைவிட்டு காதலரை கரம் பிடிக்கிறார்
x
தினத்தந்தி 17 May 2017 9:38 PM GMT (Updated: 17 May 2017 9:37 PM GMT)

ஜப்பான் இளவரசி மேக்கோ (வயது 25). இவர் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ-மிச்சிகோ தம்பதியரின் இளைய மகன் இளவரசர் அகிஷினோ-கிகோ தம்பதியரின் மகள் ஆவார்.

டோக்கியோ

ஜப்பான் இளவரசி மேக்கோ (வயது 25). இவர் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ-மிச்சிகோ தம்பதியரின் இளைய மகன் இளவரசர் அகிஷினோ-கிகோ தம்பதியரின் மகள் ஆவார். டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். இங்கிலாந்து சென்று லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் தன்னுடன் டோக்கியோ சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த கீ கொ முரு என்பவரை காதலித்து வருகிறார்.

இவர் கள் டோக்கியோவில் உள்ள ஷிபுயா என்ற உணவு விடுதியில்தான் 5 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.

தற்போது கீ கொமுரு, டோக்கியோ சட்ட அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.இளவரசி மேக்கோ, தன் காதலரை பெற்றோர் அகிஷினோ-கிகோவிடம் அறிமுகம் செய்து வைத்து, திருமணத்துக்கு அவர்களது சம்மதத்தை பெற்று விட்டார்.

இவர்களது திருமணம் எப்போது என்பது அறிவிக்கப்படவில்லை. முதலில் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு, திருமணத்துக்கான தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இளவரசி மேக்கோ, திருமணத்துக்கு பின்னர் அரச அந்தஸ்தை கைவிட்டு விட வேண்டும். இளவரசி என அழைக்கப்படமாட்டார். சாமானிய மக்களில் ஒருவராகி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story