உணவில் மனித இறைச்சி பேஸ்புக் தவறான தகவலால் மூடப்பட்ட இந்திய ஓட்டல்


உணவில் மனித இறைச்சி பேஸ்புக் தவறான தகவலால் மூடப்பட்ட இந்திய ஓட்டல்
x
தினத்தந்தி 18 May 2017 8:59 AM GMT (Updated: 2017-05-18T14:29:05+05:30)

இங்கிலாந்தில் இந்திய உணவகம் ஒன்று மனித இறைச்சியை தன்னுடைய உணவில் சேர்த்து வருவதாக பேஸ்புக்கில் வந்த தகவல் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 லண்டனில் உள்ள ஹரி டுவிஸ்ட்  என்ற இந்திய உணவகம் தன்னுடைய உணவில் மனித இறைச்சியை சமைத்து பரிமாறுவதாக சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் செய்தி வெளியானது.

இது காட்டூத் தீ போல் பரவியதால், அந்த உணவகம் மூடப்பட்டதுடன், அந்த உணவகத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் தான் போலீசாருக்கு தெரியவந்துள்ளது இது ஒரு தவறான தகவல் என்று.

இதுகுறித்து அந்த உணவகத்தின் உரிமையாளர் கூறுகையில், 60-ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருகிறோம், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

யாரோ ஒருவர் பேஸ்புக்கில் போட்ட இந்த செய்தி என்னுடைய உணவகத்தின் பெயரை கெடுத்துவிட்டது, வியாபாரமும் பாதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Next Story