மனைவியை அசத்த நினைத்து சிக்கலில் மாட்டி கொண்ட கணவன்


மனைவியை அசத்த நினைத்து சிக்கலில் மாட்டி கொண்ட கணவன்
x
தினத்தந்தி 20 May 2017 7:18 AM GMT (Updated: 2017-05-20T12:50:12+05:30)

சவுதி அரேபியாவில் மனைவியை மகிழ்விக்க எண்ணி கணவர் ஒருவர் சிக்கலில் மாட்டி கொண்டார்.

சவுதி அரேபியாவிலுள்ள மகளிர் பள்ளி ஒன்றில், ஆசிரியைகளின் அறையில் காதலை வெளிபடுத்தும் தலைசிறந்த அலங்காரங்கள் செய்யபட்டு இருந்தன.

ரோஜா இதழ்கள் மற்றும் பணநோட்டுகள் தரையிலும், நாற்காலி மற்றும் மேசையிலும் சிதறிக்கிடந்தன.

மிக பெரிய ஹீலியம் பலூன்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அந்த அறையின் நடுவில் இருந்த மேசையில் பல கேக்குகள் வைக்கப்பட்டிருந்தன.

அறையின் ஒரு மூலையில், பல பெரிய கட்டு ரோஜாக்களின் நடுவில், தங்க நெக்லஸ் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்தாக மின்னும் விளக்குகளோடு இலக்கிய குறிப்பொன்று இருந்தது.

இவை அனைத்தும்  மனைவியோடு சண்டையிட்டு கொண்ட கணவர் ஒருவரின் செயல் என்று கல்ப் நியுஸ் இணையதளம் தெரிவித்திருக்கிறது.

இது பற்றிய காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு, வைரலாகி பல லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டிருக்கிறது.
இந்த செயல் பற்றி பல பதில்களுக்கு மத்தியில், மகளிர் பள்ளி ஒன்றில் ஆண் ஒருவரால் எவ்வாறு செல்ல முடிந்தது என்ற கோபக்குரல்களும் ஒலிக்காமல் இல்லை.

"தன்னுடைய மனைவிக்கு மதிப்பளிக்கின்ற ஒரு மனிதனின் நல்ல குணமும், விசுவாசமும்தான் இதில் தெரிகிறது. ஆனால், இத்தகைய பொறுப்பற்ற முறையில் செய்திருக்கக்கூடாது. இவ்வாறு செய்ய விரும்பினால், சொந்த வீட்டில் செய்திருக்கலாமே" என்று ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த நபர் இந்த பள்ளியின் பாதுகாப்பு துறையை சேர்ந்தவர் என்றும். அதனால்தான் பள்ளிக்கூடம் பூட்டப்பட்ட பின்னரும் உள்ளே நுழைய முடிந்துள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் பழமைவாத சமூகத்தில், மாணவரும், மாணவியரும் பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிப்பதில்லை. அதேபோல பொதுவிடங்களில் ஆண்களும், பெண்களும் நெருங்கிப் பழகக்கூடாது என்று கூறப்படுகிறது.

பெண்கள் மீதான சில கட்டுப்பாடுகளை நீக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், அதிமான பெண்கள் வேலை செய்ய வைக்கும் நோக்கோடுதான் இந்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.



Next Story