பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதியில் வெட்டு டிரம்ப் நிர்வாகம் முடிவு


பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதியில் வெட்டு டிரம்ப் நிர்வாகம் முடிவு
x
தினத்தந்தி 24 May 2017 7:45 PM GMT (Updated: 2017-05-25T01:15:35+05:30)

அமெரிக்கா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் பாகிஸ்தானுக்கு 344 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,236 கோடி) நிதி உதவி வழங்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில் 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.650 கோடி) வெளிநாட்டு ராணுவ உதவி திட்டத்தின் கீழானது.

வாஷிங்டன்

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 190 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,235 கோடி) குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பாகிஸ்தானுக்கான நிதி உதவியை இந்த ஆண்டு அமெரிக்கா பெருமளவில் குறைக்கிறது. இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகும்.

கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 534 மில்லியன் டாலர் வழங்கியது. இதில் 225 மில்லியன் டாலர் வெளிநாட்டு ராணுவ உதவி திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டது.

இது தவிர, ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க செயல்பாடுகள் திட்டத்தின்கீழ் பாகிஸ்தான் செலவுகள் செய்துவிட்டு, அதை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனிடம் இருந்து திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். தெற்காசியாவில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த நிலையில் அமெரிக்காவிடம் இருந்து கூடுதல் நிதி உதவி பெறும் நாடாக பாகிஸ்தான் தொடர்ந்து விளங்கும்.


Next Story