இந்தியாவிற்கான வளர்ச்சி நிதியை குறைக்க டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை


இந்தியாவிற்கான வளர்ச்சி நிதியை குறைக்க டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை
x
தினத்தந்தி 24 May 2017 11:54 PM GMT (Updated: 24 May 2017 11:54 PM GMT)

இந்தியாவிற்கான வளர்ச்சி உதவியை கணிசமாகக் குறைக்க டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

வாஷிங்டன்

கடந்த 2016 ஆம் ஆண்டில் 85 மில்லியன் டாலர்களாக இருந்த உதவி 2018 ஆம் ஆண்டிற்கு 33.3 மில்லியன் டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமான நிதியுதவி யு எஸ் எய்ட் எனும் திட்டத்தின் கீழ் செயல்படும் சுகாதார திட்டங்களுக்காக இருந்து வந்த நிலையில் அதுவும் 35.5 மில்லியன் டாலர்களில் இருந்து 19.6 மில்லியன் டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பாதுகாப்புத் துறை தொடர்பான கல்வி மற்றும் பயிற்சிக்கு 1.2 மில்லியனிலிருந்து 1.3 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் 2 மில்லியன் டாலர் நிதியுதவி அப்படியே இருக்கிறது. 

தனது முதல் பட்ஜெட் பரிந்துரையில் தெற்காசிய நாடுகளுக்கான நிதியுதவியை அனைத்து நாடுகளுக்கும் டிரம்ப் கடுமையாக குறைத்துள்ளார். பாகிஸ்தானிற்கான இராணுவ உதவி மட்டும் தப்பியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 8,000 அமெரிக்க இராணுவ வீரர்கள் பணிபுரிகிறார்கள். அங்கு துருப்புகளின் எண்ணிக்கையை டிரம்ப் உயர்த்தவுள்ளார். அதனால் அதற்கான நிதியுதவி பெருமளவில் செய்யப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான நிதியுதவி 2 பில்லியன் டாலர்களிலிருந்து 1.4 மில்லியன் டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. நேபாளத்திற்கு எந்தவிதமான நிதியுதவியும் இல்லை. ஸ்ரீலங்காவின் நிதியுதவி 42.5 மில்லியன்களிலிருந்து வெறும் 3.3 மில்லியன்களாக குறைக்கப்பட்டுள்ளது. 


Next Story