ஒருவழியாக டிரம்ப் மனைவி மெலேனியா கையை பிடித்தார் வைரலாகும் புகைப்படம்


ஒருவழியாக டிரம்ப் மனைவி மெலேனியா கையை பிடித்தார் வைரலாகும் புகைப்படம்
x
தினத்தந்தி 26 May 2017 5:55 AM GMT (Updated: 2017-05-26T11:25:06+05:30)

வாடிகனில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலேனியாவின் கையை பிடித்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தன் மனைவி மெலேனியாவுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

முதல் சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா பயணத்தை முடித்த இருவரும் இஸ்ரேல், டெல் அவீவ் விமான நிலையம் வந்திறங்கினர்.

அப்போது, கைகொடுத்த டிரம்ப்பின் கையை மெலேனியா தட்டிவிட்டார். அதேபோல், ரோம் விமான நிலையத்திலும் டிரம்ப் கைகொடுக்க முயன்ற போது, மெலேனியா கைகொடுக்காமல் முடியை சரிசெய்வது போல் அதைத் தவிர்த்தார்.

இந்நிலையில் வாடிகனில் உள்ளசிஸ்டைன் சேப்பல் சென்ற டிரம்ப்- மெலேனியா ஜோடி கையை பிடித்த படி போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளனர். தற்போது குறித்த போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதன் மூலம் டிரம்ப்- மெலேனியா இடையே நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

Next Story