இங்கிலாந்து குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் கைது


இங்கிலாந்து குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் கைது
x
தினத்தந்தி 26 May 2017 9:41 PM GMT (Updated: 2017-05-27T03:10:46+05:30)

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

லண்டன்

தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைமை அதிகாரியான மார்க் ரோவ்லி கூறுகையில், “இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்கள் சிக்கியுள்ளனர். இன்னும் சிலரைத் தேடி வருகிறோம்” என்றார். இந்தக் கைதுகள் மூலம் தீவிரவாத வலைப்பின்னலின் கீழ் செயல்பட்டு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். 

இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டனர். இருவரை விசாரணைக்கு பிறகு விடுதலை செய்துவிட்டோம். மற்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று ரோவ்லி தெரிவித்தார். கடைசியாக 44 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்தனர். எனினும் வழக்கின் முக்கிய தடங்கள் அறியப்பட வேண்டும் என்றார் ரோவ்லி.


Next Story