குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற கோரி மனு


குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற கோரி மனு
x
தினத்தந்தி 28 May 2017 7:54 AM GMT (Updated: 28 May 2017 7:53 AM GMT)

குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லமபாத்,

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்தார் என அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்து உள்ளது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தானில் நீதி போராட்டம் என்பது சாத்தியமில்லாதது என இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. 

இருதரப்பு வாதத்தையும் கேட்ட சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவ்வை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கவேண்டும் எனவும் அடுத்த உத்தரவு வரும் வரையில் மரண தண்டனையை நிறைவேற்ற கூடாது எனவும் பாகிஸ்தானுக்கு உத்தவிட்டது. சர்வதேச நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவானது பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு பெருத்த அடியாக அமைந்தது. 

இந்த நிலையில் குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை  உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் செனட்  தலைமை வழக்கறிஞர் பரூக் நாயக் மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு பாகிஸ்தானின் உள்நாட்டு சட்டத்தை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story