ஈரான் ஆதரவு பெற்ற ஈராக்கிய படைகள் முன்னேற்றம்


ஈரான் ஆதரவு  பெற்ற ஈராக்கிய படைகள் முன்னேற்றம்
x
தினத்தந்தி 28 May 2017 11:26 PM GMT (Updated: 2017-05-29T04:56:37+05:30)

ஈரானிய அரசு ஆதரவு பெற்ற ஷியா துணை இராணுவம் இஸ்லாமிய அரசுப்படைகளை பின் தள்ளி மேற்கு மோசூல் நகரில் மேலும் முன்னேறி ஈராக் எல்லை வரை சென்றுள்ளன.

பாக்தாத்

கடந்த 2014 ஆம் ஆண்டில் யசிதி பழங்குடியினர் அதிகம் வசித்து வந்த கிராமங்களும் இதில் அடங்கும்.

யசிதி மக்கள் அதிகம் வசித்து வந்த சிஞ்சார் மலைப்பகுதி மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் என்று முஹண்டீஸ் எனும் இயக்கத் தலைவர் தெரிவித்தார். இந்த இயக்கத்திற்கு அமெரிக்க அரசின் ஆதரவும் உண்டு. இப்படையில் ஈரான் இராணுவ ஆலோசகர்களும் இடம் பெற்றுள்ளனர். ஈராக் அரசு சிரியாவை ஒட்டிய பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் திட்டத்தின்படி இப்பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஈராக்கையும், சிரியாவையும் இப்பகுதியை கைப்பற்றுவதன் இணைக்கலாம். இது சிரியா அதிபர் அஸாத்திற்கு எதிரிகளிடம் போரிட சாதகமாக இருக்கும். கடந்த ஆறு வருடங்களாக அவரது அரசை எதிர்த்து கிளர்ச்சி நடைபெற்று வருகிறது.

அக்டோபரிலிருந்து ஐஎஸ் படைகள் மோசூல் நகரை இழந்து வருகின்றனர். ஒரு சிறு பகுதி மட்டுமே அவர்கள் வசமிருக்கிறது. ஐஎஸ் படைகள் சிரியாவிலும் சில பகுதிகளை ஆட்சி செய்து வருகின்றனர். மோசூலை ஐஎஸ் இழக்கும்பட்சத்தில் ஈராக்கிலுள்ள தங்களது பாதி ‘காலிஃபா’ அரசை இழப்பார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஐஎஸ் தலைவர் பக்தாதி காலிஃபாவை நிறுவதாக அறிவித்தார். 


Next Story