வட கொரியா ஸ்கட் ரக ஏவுகணையை சோதித்தது; ஜப்பான் ஆவேசம்


வட கொரியா ஸ்கட் ரக ஏவுகணையை சோதித்தது; ஜப்பான் ஆவேசம்
x
தினத்தந்தி 29 May 2017 12:02 AM GMT (Updated: 29 May 2017 12:01 AM GMT)

வட கொரியா விமான எதிர்ப்பு ஏவுகணையை சோதித்ததாக வந்த தகவலை அடுத்து ஸ்கட் ரக ஏவுகணையை சோதித்ததாகவும், இது ஜப்பானுக்கு மிக அருகில் சென்று விழுந்துள்ளாதகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சியோல்

இந்த வகையான ஏவுகணைகளை மாற்றியமைக்கும் பட்சத்தில் 1000 கி.மீ வரை பயணித்து இலக்கைத் தாக்கும். தற்போது சோதிக்கப்பட்டது 450 கி.மீ வரை பயணித்துள்ளது. இதில் அணு ஆயுதங்களை பொருத்தி செலுத்த முடியும்.

இச்சோதனைக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சோதனை ஐநாவின் தடையை அப்பட்டமாக மீறுவதாக இருக்கும் என்று கூறியுள்ளது. இச்சோதனை பற்றி அதிபர் டிரம்பிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜப்பான் பிரதமர் அபே கூறுகையில் ஜி-7 மாநாட்டில் பேசியபடி வட கொரியா உலக நாடுகளுக்கு முன்னுரிமையுள்ள பிரச்சினையாகும். அமெரிக்காவுடனும், பிற நாடுகளுடனும் இணைந்து வட கொரியாவை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஜப்பானிய மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

வட கொரியாவின் இச்சோதனை கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலைத் தருவதாகவுள்ளது என்றும் ஜப்பான் கூறியுள்ளது.


Next Story