பிரான்டன்பெர்க் கேட்டில் சாஞ்சலர் ஏஞ்சலா மெர்கெல் உடன் பிரதமர் மோடி


பிரான்டன்பெர்க் கேட்டில் சாஞ்சலர் ஏஞ்சலா மெர்கெல் உடன் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 30 May 2017 1:45 PM GMT (Updated: 2017-05-30T19:15:27+05:30)

ஜெர்மனியில் உள்ள பிராண்டன் பெர்க் கேட்டில் அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் உடன் பிரதமர் மோடி விஜயம் செய்தார்.

பெர்லின்,

பிரதமர் மோடி பதவி ஏற்றது முதல் அதிக அளவில் அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு 6 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார்.  தனது பயணத்தின் முதல் கட்டமாக அவர், நேற்று மாலை ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்தார்.

ஜெர்மன் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நேற்று இரவு உணவு விருந்து அளித்தார். அதன்பிறகு இரு தலைவர்களும் சந்தித்து பேசினார். ஜெர்மனியின் வரலாற்று சிறப்புவாய்ந்த 18 ஆம் நூற்றாண்டு அரண்மனையான ஸ்க்லோஸ் மெசபெர்க் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது.

இந்நிலையில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பிரான்டன்பெர்க் கேட்டில் சாஞ்சலர் ஏஞ்சலா மெர்கெல் உடன் பிரதமர் மோடி விஜயம் செய்தார். அப்போது அதன் வரலாறு குறித்து  ஏஞ்சலா மெர்கெல் பிரதமர் மோடிக்கு கூறியதாக தெரிகிறது.

Next Story