பெர்லினில் தற்கொலை தாக்குதலுக்கு சதி 17 வயது சிறுவன் கைது


பெர்லினில் தற்கொலை தாக்குதலுக்கு சதி 17 வயது சிறுவன் கைது
x
தினத்தந்தி 30 May 2017 10:45 PM GMT (Updated: 2017-05-31T01:38:07+05:30)

பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

பெர்லின்,

இந்த நிலையில் அங்கு தற்கொலை தாக்குதலுக்கு சதி செய்ததாக 17 வயது சிறுவன் ஒருவர் நேற்று சிக்கினார். அவர் பெர்லின் அருகேயுள்ள உக்கர்மார்க் பிராந்தியத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதை பிரான்டன்பர்க் மாகாண அரசின் உள்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள சிறுவனின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் அவர் தனது குடும்பத்தினரிடம் இருந்து பிரியாவிடை பெற்று இறுதி தகவல் அனுப்பி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story