காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு: 50 பேர் பலியானதாக தகவல்


காபூலில் உள்ள  இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு: 50 பேர் பலியானதாக தகவல்
x
தினத்தந்தி 31 May 2017 5:32 AM GMT (Updated: 31 May 2017 5:32 AM GMT)

காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகே கார் வெடி குண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 50 பேர் பலியாகியுள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைகர் காபூலில்  பல்வேறு நாட்டு தூதரகங்கள் உள்ளன. இந்திய தூதரகமும் அங்கு உள்ளது. இந்த நிலையில், காபூலில் உள்ள ஈரான் நாட்டு தூதரகத்தை குறிவைத்து கார் வெடி குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்திய தூதரகத்தில் இருந்து 1.5 கி.மீட்டர் தொலைவில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பில் 50 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

வெடி குண்டு தாக்குதலில் இந்திய தூதகரத்தின் ஜன்னல் கண்ணாடிகள், கதவுகள் சேதம் அடைந்து இருப்பதாக ஒரு தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஆப்கானிஸ்தானில் இது போன்ற தாக்குதல்களை தலீபான் பயங்கரவாதிகள்தான் நடத்தி வருகின்றனர்.  இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து காபூலில் இது போன்ற தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story