தென் சீன கடலில் ஆய்வு மையம் அமைக்க சீனா முனைப்பு


தென் சீன கடலில் ஆய்வு மையம் அமைக்க சீனா முனைப்பு
x
தினத்தந்தி 31 May 2017 11:27 AM GMT (Updated: 2017-05-31T17:04:58+05:30)

சர்ச்சைக்குள்ளான தென் சீன கடலில் ஆய்வு மையம் ஒன்றை அமைக்க சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பெய்ஜிங்,

சீனா ஜப்பானிடமுள்ள சென்காகு தீவை தன்னுடையது என்றும் தென் சீனக்கடல் முழுதும் தன்னுடையது என்றும் கூறி வருகிறது. இது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் சீனாவின் இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இருந்தும் இப்போது ஆய்வு மையம் அமைக்க சீனா முனைப்பு காட்டுகிறது.

அமெரிக்க டாலர் மதிப்பில் 292 மில்லியன்கள் செலவழித்து உருவாக்கப்படவுள்ள இந்த ஆய்வு மையம் கடலுக்கு அடியிலான ஆய்வில் ஈடுபடும். இதை சீன அரசு தொலைக்காட்சி தெரிவித்ததாக கூறப்படுகிறது. சீனாவின் இந்த முடிவு ஜப்பான், வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகளை எரிச்சல்படுத்தும் என்று கூறுகிறார்கள்.

கடலின் மாறிவரும் தன்மை பற்றியும், பருவ நிலை மாற்றங்கள் உட்பட பலவிதமான அறிவியல் ஆய்விற்கு இந்த மையம் பயன்படும். சில நாடுகள் மிகைப்படுத்தும் அளவிற்கு இல்லாவிட்டாலும் ராணுவ ரீதியிலான பயன்பாட்டிற்கும் இந்த மையம் பயன்படும் என்கிறார் கடற்படை நிபுணர் ஒருவர். இந்த மையத்திலிருந்து பெறப்படும் தகவல்களை சேமிக்க ஷாங்காய் அருகே தகவல் மையம் ஒன்று அமைக்கப்படும்.

ஐந்து வருடங்களில் இத்திட்டம் நிறுவப்படும் என்று கூறப்படுகிறது.

Next Story