பாகிஸ்தானில் எண்ணெய் லாரி தீ பிடித்து எரிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வு


பாகிஸ்தானில் எண்ணெய் லாரி தீ பிடித்து எரிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வு
x
தினத்தந்தி 25 Jun 2017 10:52 AM GMT (Updated: 25 Jun 2017 10:52 AM GMT)

பாகிஸ்தானில் எண்ணெய் லாரி தீ பிடித்து எரிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 148 ஆக உயர்ந்தது.


இஸ்லாமாபாத்,

 
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பகாவல்பூரில், அகமத் பூர் ஷார்கியா பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்தது. டேங்கர் லாரி கவிழ்ந்தது தொடர்பான தகவல் கேட்டதும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடங்கள், வாளிகள் உள்ளிட்ட பொருட்களுடன் ஆயிலை சேகரிக்க சென்றனர். ஆயிலை சேகரிக்க மக்கள் கூடியிருந்த நிலையில் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டு உள்ளது. லாரி தீ பிடித்து எரிந்தது உள்ளது. தீ விபத்தில் அப்பகுதியில் இருந்த வாகனங்கள் அனைத்து எரிந்து நாசமாகியது.

டேங்கர் லாரி வெடித்து அப்பகுதியில் தீ பரவியது தொடர்பாக தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 123 பேர் பலியாகினர் என்றும்  75க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டது. காயம் அடைந்தவர்களில் பெரும்பாலோனர் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியது.
 
விபத்தில் காயம் அடைந்தவர்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டோருக்கு அந்நாட்டு ராணுவம் உதவி செய்து வருகிறது. காயம் அடைந்தவர்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ரமலான் கொண்டாட உள்ளநிலையில் பாகிஸ்தானில் பெரும் துயர சம்பவம் நடைபெற்று உள்ளது, அந்நாட்டு மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. இதற்கிடையே பலியானோர் எண்ணிக்கையானது 148 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து நடைபெறுவதற்கு முன்னதாகவே போலீஸ் அப்பகுதிக்கு சென்றுவிட்டது, ஆனால் உள்ளூர் மக்கள் எண்ணெய்யை சேகரிப்பதில் கவனமாக இருந்ததால் அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மிகவும் குறுகிய நேரத்தில் தீ விபத்து நேரிட்டது எப்படி என தெரியவில்லை என்றே தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story