உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 25 Jun 2017 11:45 PM GMT (Updated: 2017-06-26T01:19:21+05:30)

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள இத்லிப் மாகாணத்தில், அல்தானா நகர சந்தையில் கார் குண்டு வெடித்தது. இதில் சிக்கி 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

* உள்நாட்டுப்போர் நடந்து வருகிற ஏமனில், உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் காலரா பரவி வருகிறது. 2 லட்சத்துக்கும் அதிகமானோரை காலரா தாக்கி உள்ளது. 1,300 பேர் இறந்துள்ளனர். காலரா மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஐ.நா. சபை ஈடுபட்டுள்ளது.

* “அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு தொடர்பாக கடந்த நவம்பர் 8-ந் தேதிக்கு முன்னரே, ஒபாமாவுக்கு தெரியும். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டார்” என்று ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

* பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்நாட்டு சண்டை நடந்து வருகிற மாராவி நகரில், ரம்ஜான் பண்டிகையை மக்கள் கொண்டாடும் வகையில் நேற்று 8 மணி நேர சண்டை நிறுத்தத்தை ராணுவம் அறிவித்தது. காலை 6 மணிக்கு தொடங்கி இந்த சண்டை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது.

* கொலம்பியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

* கத்தார் நாட்டுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். கத்தாரில் உள்ள துருக்கியின் ராணுவ தளத்தை மூடுமாறு அரபு நாடுகள் கூறி இருப்பது அவமானகரமானது என அவர் கூறி உள்ளார்.

* இந்தோனேசியாவில் மெடான் நகரில் போலீஸ் அதிகாரி ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார். இது பயங்கரவாத தாக்குதலாக கருதப்படுகிறது.

Next Story