சர்ஜிக்கல் தாக்குதல் பற்றி எந்த நாடும் கேள்வி கேட்கவில்லை: பிரதமர் மோடி


சர்ஜிக்கல் தாக்குதல் பற்றி எந்த நாடும் கேள்வி கேட்கவில்லை: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 26 Jun 2017 8:20 AM GMT (Updated: 2017-06-26T13:50:23+05:30)

சர்ஜிக்கல் தாக்குதல் பற்றி எந்த நாடும் கேள்வி கேட்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


ஹிஸ்டன்,

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று அமெரிக்கா சென்றார். வர்ஜினியாவில் அமெரிக்காவாழ் இந்தியர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “உலகின் அமைதியையும், சகஜமான வாழ்க்கையையும் தீவிரவாதம் சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு நாம் தீவிரவாதம் பற்றி பேசிய போது நிறைய நாடுகள் அதை ஏதோ சட்டம்-ஒழுங்கு பிரச்சினை என்றே நினைத்தன. பயங்கரவாதத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இப்போதுதான் பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை அவர்களுக்கு புரிய வைத்துள்ளன. பயங்கரவாதிகளை அழிக்க இந்தியா கடந்த ஆண்டு சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியது.இந்தியா தன்னை தற்காத்து கொள்ள மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும், தாக்குதல் நடத்தவும் தயங்காது என்பதை அந்த சர்ஜிக்கல் தாக்குதல் சம்பவம் உலகுக்கு நிரூபித்துக்காட்டியது.

பயங்கரவாதத்துக்கு  எதிரான சர்ஜிக்கல் தாக்குதலை உலகில் எந்த நாடும் இந்தியாவிடம் கேள்வி கேட்கவில்லை. அது மட்டுமல்ல சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதன் மூலம் இந்தியாவின் வலியையும் உலக நாடுகள் உணர்ந்துள்ளன.தேவைப்படும் போது, இந்தியா தன்னை பாதுகாத்து கொள்ள இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்தியாவால் அப்போது தனது பலத்தை காட்ட முடியும். அதே சமயத்தில் இந்தியா தனது இலக்கை அடைய ஒரு போதும் சர்வதேச இடையூறுகளை உருவாக்காது. இந்தியாவின் கலாசாரமே அதுதான்” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Next Story