வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்திற்குறிய பார்சல் கண்டுபிடித்து அகற்றம்


வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்திற்குறிய பார்சல் கண்டுபிடித்து அகற்றம்
x
தினத்தந்தி 27 Jun 2017 8:39 AM GMT (Updated: 27 Jun 2017 8:39 AM GMT)

இந்திய பிரதமர்- அமெரிக்க ஜனாதிபதி சந்த்திப்பின் போது வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்திற்குறிய பார்சல் கண்டுபிடித்து அகற்றபட்டது.

வாஷிங்டன்,  

இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அமேரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்திக்க வெள்ளை மாளிகையில் தங்கியிருந்தார்.

அதே வேளையில் வெள்ளை மாளிகையின் அருகே உள்ள பென்சில்வேனியாவில் சந்தேகத்திற்குறிய பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ரகசிய சேவை அதிகாரிகள் கைப்பற்றி அகற்றினர்.

இதை தொடர்ந்து இந்திய பிரதமரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெள்ளை மாளிகை அருகே உள்ள லாஃபயெட் பார்க் மூடப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்த்தித்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணத்தின் அடுத்தக்கட்டமாக ஆம்ஸ்டர்டம் (நெதர்லாந்து) சென்றுள்ளார்.

Next Story