அல் பாக்தாதி கூட்டாளி உள்பட 6 தலைவர்கள் பலி


அல் பாக்தாதி கூட்டாளி உள்பட 6 தலைவர்கள் பலி
x
தினத்தந்தி 27 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-28T00:50:22+05:30)

ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் அல் பாக்தாதி கூட்டாளி உள்பட 6 தலைவர்கள் பலியானார்கள்.

கிர்குக்

ஈராக்கில் கிர்குக், சலாகுதீன் மாகாணங்களுக்கு இடையே அமைந்துள்ள மலைப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பயணம் செய்யப்போவதாக அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.  அதைத் தொடர்ந்து அவை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தன.  இந்த நிலையில், அங்கு அபாச்சி பகுதியில் இருந்து ஹம்ரீன் மலைப்பகுதிக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வாகனங்கள் செல்வதை அமெரிக்க கூட்டுப்படைகள் தெரிந்து, உடனடியாக அவற்றை குறிவைத்து கடுமையான வான்தாக்குதலில் ஈடுபட்டன.

இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனரான அபுபக்கர் அல் பாக்தாதியின் நெருங்கிய கூட்டாளி உள்ளிட்ட 6 ஐ.எஸ். தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டனர்.  இந்த தாக்குதலின்போது 12 வாகனங்கள் அழிக்கப்பட்டன.

இதற்கிடையே தியாலா என்ற இடத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதி ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி, தன் உடலில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட பெல்ட்டை இணைத்தபோது, அது சற்றும் எதிர்பாராத வகையில் வெடித்துவிட்டது. இதில் அவர் கொல்லப்பட்டார். மேலும் அவரது கூட்டாளிகள் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தியாலா போலீஸ் தலைவர் ஜசீம் அல் உறுதி செய்தார்.

Next Story