காரின் பின்னே நாய் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்


காரின் பின்னே நாய் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்
x
தினத்தந்தி 28 Jun 2017 7:26 AM GMT (Updated: 2017-06-28T12:55:55+05:30)

துருக்கியில் காரின் பின்னே நாய் ஒன்று கட்டப்பட்டு மனிதாபிமானமின்றி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

துருக்கியின் தென்மேற்கு பகுதியில் உள்ள முல்கா-வில் ஜெர்மன் செப்பர்டு நாய் ஒன்று காரின் பின்புறம் கட்டப்பட்டுள்ளது.

அதன் பின் அந்த காரானது அங்கிருந்து கிளம்பியுள்ளது. பின் புறம் நாய் கட்டப்படிருந்ததால், நாயும் காரின் வேகத்திற்கு இணையாக ஓடியது.

ஆனால் வேகுதூரம் இதே போன்று கார் சென்றதால், அதற்கு இணையாக நாயால் ஓடமுடியவில்லை. இதனால் நாய் நின்றுள்ளது.

ஆனால் காரை ஓட்டிய நபரோ வண்டியை நிறுத்தாமல், தொடர்ந்து ஓட்டிச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் நாய் அங்கிருக்கும் சாலையில் கிழே விழுந்து ஓட முடியாமல் கத்தியுள்ளது. ஆனால் அவர் நிறுத்தவில்லை. தொடர்ந்து கார் சென்றதால் நாய்க்கு காயங்கள் ஏற்பட்டதுடன், சாலையில் இரத்தம் வழிந்துள்ளது.

இதைக் கண்ட அங்கிருக்கும் நபர் ஒருவர் உடனடியாக இது தொடர்பாக விலங்குகள் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அவர்கள் உடனடியாக வந்து நாயை மீட்டதுடன், காரை ஓட்டிய நபர் மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

தற்போது நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், எந்த ஒரு பெரிய பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் அந்த நபர் ஏன் இப்படி செய்தான் என்பதற்கான காரணம் வெளியாகவில்லை.


Next Story