சிக்கிம் செக்டாரில் சாலை அமைக்கும் சீனா: பூடான் கடும் எதிர்ப்பு


சிக்கிம் செக்டாரில் சாலை அமைக்கும் சீனா: பூடான் கடும் எதிர்ப்பு
x

சிக்கிம் செக்டாரில் சாலை அமைக்கும் சீனாவின் நடவடிக்கைக்கு பூடான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சிக்கிம் பகுதியில் இந்தியா, சீனா, நேபாள எல்லைகளின் முச்சந்திப்பில் டோங்லாங் உள்ளது. இதில் சீனா ஒரு சாலை அமைத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு இந்தியா  கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தால் இந்தியா -சீனா இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்தியாவின் அண்டை நாடான பூடானும் சீனாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

டோக்லாமின் சோம்ப்ல்ரி பகுதி அருகே உள்ள தங்கள் நாட்டு ராணுவ முகாம் நோக்கி அமைக்கப்படும் இந்த சாலை திட்டத்துக்கு எதிராக முறைப்படி பூடான் சீன அரசாங்கத்திடம் எடுத்துரைக்கும் என்றும் சாலை அமைக்கும் பணியை உடனடியாக  கைவிட்டு முந்தைய நிலைப்பாட்டை சீனா தொடர வேண்டும் என்று இந்தியாவுக்கான பூடான் தூதர் வெட்ஸோப் நம்கெயல் தெரிவித்துள்ளார். 

கோக்லாம் சர்ச்சைக்குரிய பகுதியாகும். நிலுவையில் உள்ள எல்லைப்பிரச்சினையை பொறுத்தவரை அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று பூடான் சீனாவுடன் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும்  நம்கெயல் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

Next Story