தேவாலயம் வாங்க இங்கிலாந்து கிராம மக்களுக்கு உதவிய துபாய் ஷேக்


தேவாலயம் வாங்க இங்கிலாந்து  கிராம மக்களுக்கு உதவிய துபாய் ஷேக்
x
தினத்தந்தி 30 Jun 2017 6:03 AM GMT (Updated: 2017-06-30T11:33:10+05:30)

இங்கிலாந்தில் தேவாலயம் வாங்க கிராம மக்களுக்கு துபாய் ஷேக் ஒருவர் உதவி செய்துள்ளார்.


இங்கிலாந்து கோன்வாலிலுள்ள ஒரு  கிராமம், மேத்தோடிஸ்ட் ஆலயம் வாங்குவதற்கு துபாயை ஆட்சி செய்கின்ற ஷேக் முகமுது பின் ரஷீத் 
அல் மக்டோம் உதவி செய்துள்ளார்.

இந்த தேவாலயத்தை வாங்குவதற்காக நிதி திரட்டும் கடைசி முயற்சியாக ஹெல்ஸ்டனுக்கு அருகிலுள்ள கோடால்பின்வாசிகள் துபாய் ஷேக்கிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற கோடால்பின் ஸ்டேபிள்ஸூடன் ஷேக்கின் நிதி ஆதரவு என்ற பெயரையும் இந்த கிராமம் பகிர்ந்துள்ளது.

"இந்த செயலை மிகவும் பாராட்டுகின்றோம்" என்று கோடால்பின் சிலுவை சமூக கூட்டமைப்பின் ரிச்சர்ட் மைக்கி தெரிவித்திருக்கிறார்.

சமூக மையமாக மாற்ற எண்ணிய இந்த கூட்டமைப்பினருக்கு இந்த ஆலயத்தை  வாங்குவதற்கு 90 ஆயிரம் பவுண்ட் தேவைப்பட்டது. 25 ஆயிரம் பவுண்ட் ஏற்கெனவே திரட்டியிருந்தனர்.

ஷேக் எவ்வளவு தொகை அளித்தார் என்று கூறப்படவில்லை. ஆனால், தேவைப்படுகின்ற நிதிக்கு அவர்களை மிகவும் நெருங்கி வர செய்ததாக மைக்கி தெரிவித்திருக்கிறார்.


Next Story