பிரபல செய்தி ஊடகத்தை விமர்சனம் செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பிரபல செய்தி ஊடகத்தை ஒரு வீடியோ பதிவு செய்து கிண்டல் அடித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொண்டிருந்தபோதே டிரம்பை முக்கியமான அமெரிக்க ஊடகங்கள் அனைத்தும் வறுத்தெடுத்தன.
அப்போதிலிருந்தே டிரம்ப்பும் அமெரிக்க ஊடகங்களை நேரிடையாக தாக்கி வருகிறார். இந்நிலையில்தான் அவர், தான் முன்னர் அமெரிக்க மல்யுத்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வீடியோவை மார்பிங் செய்து பிரபல செய்தி ஊடகத்தை கிண்டல் செய்துள்ளார்.
அந்த வீடியோவில் டிரம்ப் இன்னொருவரை அடிக்கிறார். ஆனால், அந்த நபரின் முகத்துக்கு பதில் அந்த ஊடகத்தின் பெயர் எழுதப்பட்டுள்ளது.
#FraudNewsCNN #FNN pic.twitter.com/WYUnHjjUjg
— Donald J. Trump (@realDonaldTrump) July 2, 2017
ஜனாதிபதி டிரம்ப்பின் இந்த டுட்டர் பதிவு உலகளவில் பெரும் அதிர்வலைகளை எற்படுத்தியுள்ளன. ஊடகங்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தலாம் என்பது போல டிரம்ப்பின் டுவிட்டர் பதிவு இருப்பது பலத்த கண்டனங்களுக்கும் ஆளாகியுள்ளது.
சில நாள்களுக்கு முன்னர் டிரம்ப், நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளை, 'தோல்வியடைந்து வரும் நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் என்னைப் பற்றி தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
அந்தச் செய்தி உண்மையா என்பதைக்கூட அவர்கள் பார்ப்பதில்லை. அது தவறான செய்திகளை வெளியிடும் ஜோக்' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






