அழகான பெண்கள் பட்டியலில் மெலேனியா டிரம்ப்- இவாங்கா டிரம்ப்


அழகான பெண்கள் பட்டியலில் மெலேனியா டிரம்ப்- இவாங்கா டிரம்ப்
x
தினத்தந்தி 27 July 2017 12:12 PM GMT (Updated: 2017-07-27T17:41:57+05:30)

ஹில் பத்திரிக்கை வெளியிட்டுள்ள வாஷிங்டனில் உள்ள அழகான பெண்கள் பட்டியலில் மெலேனியா மற்றும் இவாங்கா இடம் பிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல ஹில்  பத்திரிக்கை வாஷிங்டனில் வசிக்கும் 2017-க்கான அழகான 50 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலானது தரவரிசை படி வெளியிடப்படாமல், அகவரிசை படி வெளியிடப்பட்டுள்ளது.

50 அழகான பெண்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவியும், அந்நாட்டின் முதல் பெண்மணியுமான மெலேனியா டிரம்ப் இடம் பிடித்துள்ளார்.

அதே போல டிரம்பின் மகள் இவாங்காவின் பெயரும் பட்டியலில் உள்ளது. வெள்ளை மாளிகையின் உள்நாட்டு கொள்கை உறுப்பினர் ஜினா பாஸ் , வெள்ளை மாளிகையின் தொடர்பு துறை இணைப்பாளர் லேயா லெவெல் மற்றும் வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளர் ரெவீன் பிரீபஸ்க்கு உதவியாளராக இருக்கும் மல்லோரி ஹன்டே ஆகிய மூன்று பேரும் அழகான பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

கடந்த 2015ல் ஹில்  பத்திரிக்கை வெளியிட்ட அழகான பெண்கள் பட்டியலில் முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story