ஒரே நாளில் சிறுமி வெவ்வேறு நபர்களால் இருமுறை பாலியல் பலாத்காரம் செய்யபட்ட கொடூரம்


ஒரே நாளில் சிறுமி வெவ்வேறு நபர்களால் இருமுறை பாலியல் பலாத்காரம் செய்யபட்ட கொடூரம்
x
தினத்தந்தி 28 July 2017 5:32 AM GMT (Updated: 2017-07-28T11:02:13+05:30)

இங்கிலாந்தில் 15 வயது சிறுமி ஒரே நாளில் வெவ்வேறு நபர்களால் இருமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பர்மிங்ஹாமில் உள்ள விட்டான் ரெயில் நிலையத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தின் போது 15 வயது சிறுமி தனது தோழியுடன் ரெயில் நிலையத்திற்கு சென்றுக்கொண்டிருந்த போது, பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளான்.

பாதிக்கப்பட்ட சிறுமி ரயில் நிலையத்திற்கு வெளியே வந்து வாகனங்களை வழிமறித்து உதவி கேட்டுள்ளார். சிறுமிக்கு உதவி கொடுத்து காரில் ஏற்றிய மர்ம நபர், காரில் வைத்து மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு மர்ம நபர்களும் ஆசியாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தள்ளது.

சம்பவயிடத்தில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வரும் போலீசார், இரண்டு குற்றவாளிகளையும் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story