வடகொரியா விவகாரத்தில் சீனா ஒன்றும் செய்வது கிடையாது டொனால்டு டிரம்ப் பாய்ச்சல்


வடகொரியா விவகாரத்தில் சீனா ஒன்றும் செய்வது கிடையாது டொனால்டு டிரம்ப் பாய்ச்சல்
x
தினத்தந்தி 30 July 2017 4:34 AM GMT (Updated: 30 July 2017 4:34 AM GMT)

வடகொரியா விவகாரத்தில் சீனா ஒன்றும் செய்வது கிடையாது என டொனால்டு டிரம்ப் விமர்சனம் செய்து உள்ளார்.



வாஷிங்டன்,


வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து 11–வது ஆண்டாக அணு ஆயுத சோதனையிலும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது.

 உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், சர்வதேச உடன்படிக்கைகளையும் உதறித்தள்ளிவிட்டு, கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஏவுகணை சோதனையை வடகொரியா அதிரடியாக நடத்தி வருகிறது.

வட கொரியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகள் விதிக்க வகை செய்யும் மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளும் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றின. இந்த மசோதா, டிரம்ப் கையெழுத்து போட்டவுடன் சட்டமாகி விடும். இந்நிலையில் வடகொரியா அதிரடியாக கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குகிற வல்லமை படைத்த ஏவுகணை ஒன்றை நேற்று முன்தினம் இரவு, முப்யாங்னி என்ற இடத்தில் ஏவி சோதித்தது. இது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

 “ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்துகிற ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. இது பொறுப்பற்ற செயல், ஆபத்தான செயல். அமெரிக்காவை பாதுகாப்பதற்கும், பிராந்தியத்தில் உள்ள கூட்டாளிகளை பாதுகாப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொள்ளும்” என்று டொனால்டு டிரம்ப் கூறினார். வடகொரியா விவகாரத்தில் சீனாவை தொடர்ச்சியாக டொனால்டு டிரம்ப் சாடி வருகிறார்.

இப்போதும் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தடுக்க சீனா ஒன்றும் செய்வது கிடையாது என டொனால்டு டிரம்ப் விமர்சனம் செய்து உள்ளார். “சீனாவின் மீது நான் மிகவும் அதிருப்தி கொண்டு உள்ளேன். நம்முடைய முன்னாள் தலைவர்கள் அவர்களை நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்திற்கு அனுமதித்து உள்ளனர், ஆனால் அவர்கள் நமக்காக வடகொரியாவுடன் எந்தஒரு பணியை செய்தது கிடையாது, பேச மட்டும் செய்கிறார்கள், இதனை தொடர நாங்கள் விடமாட்டோம், சீனா இவ்விவகாரத்தை எளிதாக சரிசெய்யலாம்,” 

Next Story