படையெடுப்பவர்களை எதிர்க்கொள்ள சீன ராணுவம் தயார் என ஜி ஜின்பிங் பேச்சு


படையெடுப்பவர்களை எதிர்க்கொள்ள சீன ராணுவம் தயார் என ஜி ஜின்பிங் பேச்சு
x
தினத்தந்தி 30 July 2017 4:56 AM GMT (Updated: 2017-07-30T10:26:39+05:30)

சீனா மீது போர் தொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் எதிர்க்கொள்ள தயார் என அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பேசிஉள்ளார்.


பெய்ஜிங்,

சீன ராணுவத்தின் 90-வது தொடக்க நாள் விழாவில் அந்நாட்டின் மிகப்பெரிய ராணுவ தளத்தில் நடந்த ராணுவ அணிவகுப்பை அதிபர் ஜி ஜின்பிங் பார்வையிட்டார். சீனாவின் மத்திய ராணுவ கமிஷன் தலைவராக இருக்கும் ஜி ஜின்பிங் பேசுகையில், “படையெடுக்கும் எதிரிகளை தோற்கடிக்கும் நம்பிக்கை மற்றும் திறனை நம்முடைய கம்பீரமான ராணுவம் கொண்டு உள்ளது என நான் முழுவதுமாக நம்புகின்றேன்,” என்று கூறிஉள்ளார். 10 நிமிடங்கள் ஜி ஜின்பிங் பேசியது அந்நாட்டு மீடியாக்கள் மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பட்டு உள்ளது.

சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை நம்முடைய ராணுவம் பாதுகாக்கும் என கூறிஉள்ளார் ஜி ஜின்பிங். ஷூரிஹி ராணுவ தளத்தில் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு நடைபெற்று உள்ளது. எந்தஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டு இதனை பேசவில்லை.

சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன.

 இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என கூறி வரும் சீனா, இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வருகிறது. இந்தியா ஏற்கனவே இருதரப்பும் ராணுவத்தை பழைய நிலைக்கு திரும்ப அழைக்க வேண்டும் என கூறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story