வடகொரியாவுடன் இனி பேச்சு கிடையாது ;ஐநா தடைகளை விதிக்க சீனா முன் வர வேண்டும் - அமெரிக்கா


வடகொரியாவுடன் இனி பேச்சு கிடையாது ;ஐநா தடைகளை விதிக்க  சீனா முன் வர வேண்டும் - அமெரிக்கா
x
தினத்தந்தி 31 July 2017 7:13 AM GMT (Updated: 2017-07-31T12:43:43+05:30)

வடகொரியாவுடன் இனி பேச்சு கிடையாது ;ஐநா தடைகளை விதிக்க சீனா முன் வர வேண்டும் என அமெரிக்கா கூறி உள்ளது.

டோக்கியோ

வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து 11–வது ஆண்டாக அணு ஆயுத சோதனையிலும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது.

 உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், சர்வதேச உடன்படிக்கைகளையும் உதறித்தள்ளிவிட்டு, கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஏவுகணை சோதனையை வடகொரியா அதிரடியாக நடத்தி வருகிறது.

வட கொரியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகள் விதிக்க வகை செய்யும் மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளும் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றின. இந்த மசோதா, டிரம்ப் கையெழுத்து போட்டவுடன் சட்டமாகி விடும். இந்நிலையில் வடகொரியா அதிரடியாக கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குகிற வல்லமை படைத்த ஏவுகணை ஒன்றை நேற்று முன்தினம் இரவு, முப்யாங்னி என்ற இடத்தில் ஏவி சோதித்தது. இது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தடுக்க சீனா ஒன்றும் செய்வது கிடையாது என டொனால்டு டிரம்ப் விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கான ஐநா தூதர்  நிக்கி ஹேலே கூறியதாவது:-

 வடகொரியாவுடன் பேச்சை அமெரிக்கா முடித்து கொண்டது.  ஜாப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே இன்று  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் பேசினார். அப்போது வட கொரியா மீது தேவையான நடவடிக்கை  எடுக்க ஒப்புகொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா இரவு நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது  இந்த மாதம் இது இரண்டாவது சோதனையாகும் இதனை தொடர்ந்து வட கொரியா  மீது வலுவான ஐ.நா. பொருளாதாரத் தடைகளை சுமத்துவதற்கு சீனா தயாராக உள்ளதா என சீனா தீர்மானிக்க வேண்டும்.

"அது வடகொரியாவின் மீது  சர்வதேச அழுத்தத்தை கணிசமாக அதிகரிக்கவில்லை என்றால்  மதிப்பு இல்லை. அதுபோல் ஜப்பான் மற்றும் தென்கொரியா இன்னும் அதிகபடியாக செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story