இங்கிலாந்தில் சாலை விபத்து: பலர் பலி; 4 பேர் காயம்


இங்கிலாந்தில் சாலை விபத்து:  பலர் பலி; 4 பேர் காயம்
x
தினத்தந்தி 26 Aug 2017 11:33 AM GMT (Updated: 2017-08-26T17:03:22+05:30)

இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலர் பலியாகியுள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.

எடின்பர்க்,

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு 80 கி.மீட்டர் தொலைவில் வடமேற்கே நியூபோர்ட் பேக்னெல் பகுதியருகே எம்.1. மோட்டார்வே சாலை பகுதி உள்ளது.

இந்த பகுதியில் நாட்டிங்காம் பகுதியில் இருந்து வந்த மினி பேருந்து ஒன்று மற்றும் இரு லாரிகள் மோதி விபத்திற்குள்ளாகின. இந்த விபத்தில் பலர் பலியாகியுள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். வங்கி விடுமுறை தொடக்க நாளான இன்று நடந்த இந்த விபத்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story