ஜப்பானைக் கடந்து செல்லும்படி ஏவுகணை செலுத்தியதாக வட கொரியா தகவல்


ஜப்பானைக் கடந்து செல்லும்படி  ஏவுகணை செலுத்தியதாக வட  கொரியா தகவல்
x
தினத்தந்தி 29 Aug 2017 10:53 PM GMT (Updated: 2017-08-30T04:23:15+05:30)

ஜப்பானைக் கடந்து செல்லும்படி ஏவுகணை செலுத்தியதாக வட கொரியா அதிகாரபூர்வமாக கூறியுள்ளது.

சியோல்

ஹூவாசோங் -12 என்ற பெயரிடப்பட்டுள்ள மத்தியதூர ஏவுகணையை செலுத்தியதாகவும், அதனை அதிபர் கிம் ஜாங் -உன் கண்காணித்தாதகவும் அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்தது. “ ஏவுகணை ஹோக்கைடோவின் ஓஷிமா தீபகற்பம், எரிமோ முனை ஆகியவற்றின் விண்ணைத் தாண்டி தடம் மாறாமல் வடக்கு பசிபிக்கின் இலக்கை துல்லியமாக தாக்கியது” என்று அந்த அறிவிக்கை தெரிவித்தது. 

இப்படியொரு ஒப்புதல் அறிவிக்கை வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.


Next Story