டிரம்ப் மகன் ரகசியமாக சாட்சியம்


டிரம்ப் மகன் ரகசியமாக சாட்சியம்
x
தினத்தந்தி 29 Aug 2017 11:31 PM GMT (Updated: 2017-08-30T05:01:21+05:30)

அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் ஜூனியர் டிரம்ப் செனட் விசாரணை குழுவின் முன் ரகசியமாக சாட்சியமளிக்கவுள்ளார்.

வாஷிங்டன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு பற்றிய விசாரணையின் ஒரு பகுதியாக இந்த ரகசிய சாட்சியம் இடம் பெறுகிறது. ஜூலை மாதம் அவரை பொது விசாரணைக்கு அழைத்தப் பிறகு இப்போது ரகசிய விசாரணைக்கு வரவுள்ளார் ஜூனியர் டிரம்ப்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்டுள்ள இத்தகவலை இதுவரை விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எவரது அலுவலகமும் உடனடியாக உறுதிபடுத்தவில்லை.


Next Story