ஈராக்குடனான எல்லையை திறக்கிறது ஜோர்டான்


ஈராக்குடனான எல்லையை  திறக்கிறது ஜோர்டான்
x
தினத்தந்தி 30 Aug 2017 12:24 AM GMT (Updated: 30 Aug 2017 12:24 AM GMT)

கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு ஈராக்குடனான தனது எல்லையை திறக்கிறது ஜோர்டான்.

அம்மான்

ஐஎஸ் இயக்கம் விரட்டியடிக்கப்பட்டப் பிறகு முதல் முறையாக டிரக் வண்டிகள் எல்லைத்தாண்டி போகிற சூழல் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. 

ஜோர்டான் அதிகாரிகள் சுங்கம் மற்றும் எல்லைப்புற காவல் படை ஏற்பாடுகள் நிறைவடைந்து விட்டது என்றனர். எல்லையிலிருந்து பாக்தாத் வரையிலான 550 கிலோமீட்டர் தூரம் பாதுகாப்பாக இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் எப்போதிலிருந்து எல்லைத் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. புதன் முதல் திறக்கப்படலாம் என்று வணிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

ஜோர்டானின் ஐந்தில் ஒரு பங்கு ஏற்றுமதி, சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ளது, ஈராக்குடன் நடைபெறுகிறது என்று சர்வதேச செலாவணி நிதியம் கூறியுள்ளது. ஜோர்டனின் வர்த்தக சமூகம் பொருளாதாரத்திற்கு இந்த நடவடிக்கை ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளது. தற்போது கடல் வழியே அதிக தொலைவு கடந்து ஏற்றுமதி நடைபெறுகிறது. இதனால் செலவு கூடுகிறது. 

எல்லையைத் திறப்பது பாஸ்ரா முதல் ஜோர்டானின் அகாபா வரையிலான எண்ணெய் குழாய் திட்டத்தையும் விரைவுப்படுத்தும் என்று கருதப்படுகிறது. இதன் மூலம் விரைவில் சிரியாவின் எல்லையையும் திறக்க உதவும் என்று நம்பப்படுகிறது.


Next Story