லண்டனில் சிகிச்சை பெறும் மனைவியை சந்திக்க நவாஸ் ஷெரீப் இங்கிலாந்து பயணம்


லண்டனில் சிகிச்சை பெறும் மனைவியை சந்திக்க நவாஸ் ஷெரீப் இங்கிலாந்து பயணம்
x
தினத்தந்தி 30 Aug 2017 10:06 AM GMT (Updated: 2017-08-30T15:36:07+05:30)

லண்டனில் சிகிச்சை பெறும் மனைவியை சந்திக்க நவாஸ் ஷெரீப் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி கல்சூம் ஷெரீப் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். புற்றுநோயால் அவதிப்படும் கல்சூம் ஷெரீப் லண்டனில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியை காண நவாஸ் ஷெரீப் லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார். லண்டனில் சுமார் 10 தினங்கள் நவாஸ் ஷெரீப் தங்கியிருப்பார் என்று அவரது உதவியாளர்கள் தெரிவித்துள்ளார். லண்டன் புறப்படும் முன், தனது மனைவி உடல் நலத்திற்காக பாகிஸ்தான் மக்கள் பிரார்த்திக்குமாறு நவாஸ் ஷெரீப் கேட்டுக்கொண்டார். 

EK-625  எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டு சென்ற நவாஸ் ஷெரீப்பை ,அவரது சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியுமான ஷபாஷ் ஷெரீப் வழியனுப்பி வைத்தார். இதற்கிடயில், ஊழல் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக நவாஸ் ஷெரீப் லண்டனில் தஞ்சம் அடைவதாக ஊகங்கள் பாகிஸ்தானில் எழுந்து வருகின்றன. ஆனால், ஊகங்களை திட்டவட்டமாக மறுத்த  நவாஸ் ஷெரீப் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் மக்களால் அதிகம் நேசிக்கப்படும்  நவாஸ் ஷெரீப் ஏன் வெளிநாட்டில் தஞ்சம் அடையவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story