தீவிரவாதிகளின் முகாம்கள் மீது நடவடிக்கை எடுப்பது முக்கியமானது - பாக். கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்


தீவிரவாதிகளின் முகாம்கள் மீது நடவடிக்கை எடுப்பது முக்கியமானது - பாக். கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 Aug 2017 12:02 AM GMT (Updated: 2017-08-31T05:32:13+05:30)

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியமானது என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

வாஷிங்டன்

பாகிஸ்தான் நாடாளுமன்றமும், முக்கிய அமைச்சர்களும் அமெரிக்கா தங்களை பற்றி தவறான பார்வையை உருவாக்குவதாக குற்றஞ்சாட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள சூழலில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர், “ பாகிஸ்தானுடனான ஒத்துழைப்பை நாங்கள் மதிக்கிறோம். அது தொடர வேண்டும் என்றும் கருதுகிறோம்” என்று கூறியுள்ளார்.

தெற்காசிய பிராந்தியத்தை அச்சுறுத்தி வரும் தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் மூன்று உயர்மட்ட சந்திப்புகளை ரத்து செய்துவிட்டது. 

இருப்பினும் வெளியுறவுத்துறை அமைச்சர் டில்லர்சன்,” நாங்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கு உதவி செய்யத்தயாராக இருப்பதாக” கூறினார்.

பாகிஸ்தான் இதர நாடுகளை விட தீவிரவாதத்தால் தான் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்று பலமுறை கூறியுள்ளதை அடிப்படையாக கொண்டதாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக கூறும்போதெல்லாம் பாகிஸ்தான் அந்நாடும் பேரளவில் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் நாடு என்று கூறுவது வழக்கம்.


Next Story