வடகொரியாவுடன் இனி பேச்சு வார்த்தை கிடையாது டொனால்டு டிரம்ப் திட்டவட்டம்


வடகொரியாவுடன் இனி பேச்சு வார்த்தை கிடையாது  டொனால்டு டிரம்ப் திட்டவட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2017 5:52 AM GMT (Updated: 2017-08-31T11:22:18+05:30)

வடகொரியாவுடன் இனி பேச்சு வார்த்தை கிடையாது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா தொடர்ந்து கண்டம் கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு  உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  சமீபத்தில் கூட ஜப்பான் மீது ஏவுகணையை பறக்கவிட்டு, பசுபிக் பெருங்கடலில் விழச் செய்து சோதனை நடத்தியது.

இந்த ஏவுகணை அணுஆயுதங்களை எடுத்துச் சென்று தாக்கும் திறனுடையது என்றும், அதுமட்டுமின்றி இந்த ஏவுகணை சோதனை குவாம் தீவு மீது தாக்குதல் நடத்துவதற்காக சோதனை செய்யப்பட்டது என்று தகவல்கள் கூறப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில், வடகொரியாவிடம் இனி பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது என்றும் 25 ஆண்டுகள் பொறுத்துப் பார்த்தாச்சு இனியும் பொறுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதற்கு அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி, பேச்சுவார்த்தை நடத்த ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


Next Story