உலக செய்திகள்

அமெரிக்காவில் 7 பேர் சுட்டுக்கொலை + "||" + Seven shot dead in US

அமெரிக்காவில் 7 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில்
7 பேர் சுட்டுக்கொலை
அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் ஏழு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நியூயார்க்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், டல்லாஸ் நகரின் புறநகர் பகுதியான பிளனோ என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவு சிலர், டி.வி.யில் கால்பந்து விளையாட்டு போட்டியை கண்டுகளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வீட்டுக்கு வந்த மர்மநபர் ஒருவர் அங்கு இருந்த ஒரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த அந்த மர்மநபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டு தள்ளினார்.

இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த மர்மநபர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து போலீசார் அந்த மர்மநபரை சுட்டுக்கொன்றனர்.

பின்னர் போலீசார் படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்தியவர் யார்? அவருக்கும் வீட்டில் இருந்தவர்களுக்கும் என்ன உறவு முறை? தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பன உள்ளிட்டவை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.