அரபு லீக் கூட்டத்தில் புறக்கணிப்பட்ட கத்தார்


அரபு லீக் கூட்டத்தில் புறக்கணிப்பட்ட கத்தார்
x
தினத்தந்தி 13 Sep 2017 11:25 AM GMT (Updated: 13 Sep 2017 11:25 AM GMT)

கத்தார் மற்றும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கலந்துரையாடுவதை, அந்நாடுகளின் தூதர்கள் தவிர்த்துள்ளனர்.


அரபு லீக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், அக்கூட்டத்தில் கத்தார் மற்றும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள  நிலைமை தொடர்பில் சூடான வாக்குவாதங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சூடான வாக்குவாதங்கள் தேவையற்றது என்பதுடன், அமைதியைக் கடைபிடிக்குமாறு கூறப்பட்ட நிலையில், சூடான வாக்குவாதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக  கலந்துரையாடும் வகையில் கூட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவில்லை. ஆகையால், தனது தொடக்க உரையில் கத்தார்-சவூதி அரேபிய நாடுகளுக்கு இடையிலான விவகாரத்தை முன்வைப்பதற்கு கத்தார் வெளிவிவகார அமைச்சர் சுல்தான் பின் ஸாட் அல் முராக்கி தவிர்த்துள்ளார் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கத்தார் பயங்கரவாதத்துக்கு உதவி அளிப்பதாகக் கூறி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்  பக்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கடந்த ஜுன் 5ஆம் தேதி கத்தாருடனான தமது தூதரக உறவை முறித்துக்கொண்டன. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை கத்தார் நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story