உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான்:காபூலில் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே குண்டு வெடிப்பு + "||" + Blast outside Afghanistan cricket stadium during league match

ஆப்கானிஸ்தான்:காபூலில் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தான்:காபூலில் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தான் காபூலில் கிரிக்கெட் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது இதில் 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழந்தது. தற்கொலைப்படை நடத்திய இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குண்டு வெடிப்புக்கு பின்னர் உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டது. அனைத்து கிரிக்கெட் வீரர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பு ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.