காஷ்மீருக்கு சிறப்பு தூதரை நியமிக்க ஐ.நா.வில் பாகிஸ்தான் வலியுறுத்தல்


காஷ்மீருக்கு சிறப்பு தூதரை நியமிக்க ஐ.நா.வில் பாகிஸ்தான் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Sep 2017 9:09 AM GMT (Updated: 22 Sep 2017 9:09 AM GMT)

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தூதர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று ஐநாவில் பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.

ஜெனீவா

ஜம்மு -காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்கள் நடவடிக்கையில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது. அதனால் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தூதர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று  ஐநாவில் வலியுறுத்தி உள்ளது.

ஐநா பொது சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி கூறியதாவது:-

எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி நடத்தின் இந்தியாவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் பாகிஸ்தான் ஒரு தகுந்த பதிலடியை கொடுக்கும்.  இந்தியா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் துணிகரமாக செய்கிறது.என கூறினார்.

Next Story