ஜெர்மனியில் அதிபர் தேர்தல் தொடங்கியது; மெர்கல்லுக்கு வெற்றி வாய்ப்பு என கருத்து கணிப்பு முடிவு


ஜெர்மனியில் அதிபர் தேர்தல் தொடங்கியது; மெர்கல்லுக்கு வெற்றி வாய்ப்பு என கருத்து கணிப்பு முடிவு
x
தினத்தந்தி 24 Sep 2017 7:50 AM GMT (Updated: 24 Sep 2017 7:50 AM GMT)

ஜெர்மனியில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதில் அதிபர் மெர்கல் 4வது முறையாக வெற்றி பெறுவார் என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

பெர்லின்,

ஜெர்மனியில் அதிபராக பதவி வகித்து வருகிறார் ஏஞ்செலா மெர்கல். இந்நிலையில் அவரது பதவி காலம் முடிவடைவதனை அடுத்து அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் மெர்கல் போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த மார்டின் ஸ்கல்ஸ் தேர்தலில் நிற்கிறார். 3வது இடத்தினை பிடிப்பதற்கு 4 சிறிய கட்சிகள் போட்டியில் உள்ளன.

மெர்கல்லின் கன்சர்வேடிவ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனால் அவர் 4வது முறையாக அதிபராக பொறுப்பேற்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. ஜெர்மனியில் அதிபரின் பதவி காலம் 4 வருடங்கள் ஆகும்.

இந்நிலையில், அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று தொடங்கியுள்ளது.  இந்த வாக்கு பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடையும்.


Next Story