லண்டனில் ஆசிட் வீச்சு சம்பவத்தில் 6 பேர் காயம்; 15 வயது சிறுவன் கைது


லண்டனில் ஆசிட் வீச்சு சம்பவத்தில் 6 பேர் காயம்; 15 வயது சிறுவன் கைது
x
தினத்தந்தி 24 Sep 2017 11:46 AM GMT (Updated: 2017-09-24T17:16:37+05:30)

லண்டன் நகரில் இரு குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி ஆசிட் வீசப்பட்டதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள வர்த்தக மையம் ஒன்றில் ஆடவர் சிலர் இரு குழுக்களாக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு இடையே ஆசிட் வீசப்பட்டது.

இதனை அடுத்து இரு குழுக்களும் அங்கிருந்து கலைந்து ஓடின. எனினும், அவர்களில் சிலருக்கு உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வீரர்கள், அவசரகால மருத்துவ நிபுணர்கள் சென்றுள்ளனர்.

அவர்கள் காயமடைந்த 6 பேருக்கு உடனடியாக சிகிச்சை அளித்துள்ளனர். காயமடைந்தவர்களில் 3 பேர் உடனடியாக லண்டனில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 15 வயது சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளான்.


Next Story