உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 24 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-25T01:02:16+05:30)

லண்டன் நகரின் ஸ்டிராட்போர்டு சென்டர் அருகே நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஒரு தரப்பினர் நடத்திய திராவக வீச்சில் சிக்கி 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

* லண்டன் நகரின் ஸ்டிராட்போர்டு சென்டர் அருகே நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஒரு தரப்பினர் நடத்திய திராவக வீச்சில் சிக்கி 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

* ஆஸ்திரேலியாவில் இந்துக் கடவுளான விநாயகர் இறைச்சி சாப்பிடுவது போன்ற காட்சியை விளம்பரப்படத்தில் இடம்பெற செய்தது, இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையொட்டி அங்கு சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று கண்டன பேரணி நடத்தப்பட்டது. இதில் திரளான இந்து மக்கள் கலந்து கொண்டனர்.

* இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

* மெக்சிகோ தொடர்ந்து நில நடுக்கங்களை சந்தித்து வந்துள்ள நிலையில், இப்போது அங்கு பொப்போகேட்பெட்டி எரிமலை சாம்பலை கக்கியது பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

* சிரியாவில் டெயிர் அல் ஜோர் மாகாணத்தில் முக்கியமான இயற்கை எரிவாயு வயல் ஒன்றை அமெரிக்க ஆதரவு படைகள் கைப்பற்றி உள்ளன.


Next Story