பாஸ்போர்ட் புகைப்படத்தை விட இளமையாக தோன்றியதால் பாடகி கைது


பாஸ்போர்ட் புகைப்படத்தை விட இளமையாக தோன்றியதால் பாடகி கைது
x
தினத்தந்தி 26 Sep 2017 12:16 PM GMT (Updated: 2017-09-26T17:46:44+05:30)

விமான நிலையத்தில் பாஸ்போர்ட் புகைப்படத்தை விட இளமையாக தோன்றியதால் பாடகி கைது செய்யப்பட்டார்.

நியூயார்க்,

நடாலியா சென்கிவ் (வயது 41) பாடகி துருக்கி சென்றுவிட்டு நியூயார்க் திரும்பி கொண்டிருந்தார். அப்போது நியூயார்க் விமான நிலையத்தில் அவரது பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இருந்த புகைப்படத்தை விட நேரில் நடாலியா20 வயது  இளமையாக தோன்றியதால் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. வேறு ஒருவரின் பாஸ்போர்ட்டை வைத்து மோசடி செய்து விட்டதாக கூறி அவரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து விசாரணையில் அவர் பிரபல பாடகி என தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து நடாலியா கூறுகையில்,

இது தனது அழகுக்கு கிடைத்த வித்தியாசமான அங்கீகாரம் என கருதுகிறேன். இந்த சம்பவத்திற்கு பாடகில் நலாலியாவுடன் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கம் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் நியூயார்க் விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

நடாலியா ரசிகர் ஒருவர் கூறுகையில்,

அவர் பழங்கள், காய்கறிகளை மட்டுமே சாப்பிடுகிறார். அதனால் அவர் இளமையாக உள்ளார் என அவர் கூறினார்.

Next Story