ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 300 எட்டியது! இந்தியாவில் இருந்து வாங்க மாட்டோம் - பாகிஸ்தான் சொல்கிறது


ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 300 எட்டியது! இந்தியாவில் இருந்து வாங்க மாட்டோம் - பாகிஸ்தான் சொல்கிறது
x
தினத்தந்தி 26 Sep 2017 3:39 PM GMT (Updated: 26 Sep 2017 3:39 PM GMT)

பாகிஸ்தானில் தக்காளி விலை அதிகரித்து உள்ளநிலையில் இந்தியாவில் இருந்து வாங்கமாட்டோம் என தெரிவித்து உள்ளது.


இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் இப்போது உள்ளூர் மார்க்கெட்டில் தக்காளி பற்றாக்குறையில் தவிக்கிறது. ஒவ்வொரு வருடம் தேவையை நிறைவேற்ற இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யும். இப்போது எல்லையை தாண்டி கண்டெய்னர்கள் வருவதற்கு தடை ஏற்பட்டு உள்ள நிலையில் தாக்காளி பற்றாக்குறை அதிகரித்து உள்ளது என எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டு உள்ளது. லாகூரில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 300 எட்டியநிலையிலும் இந்தியாவில் இருந்து தக்காளியை வாங்க மாட்டோம் என அந்நாட்டு உணவுத்துறை மந்திரி ஷிகந்தர் ஹயாத் போசான் கூறிஉள்ளார். 

இப்போது உள்ளூர் வியாபாரிகள் சிந்து மாகாணத்தில் இருந்து தாக்காளி வரும் என எதிர்பார்ப்பில் உள்ளனர் என அந்நாட்டு மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. 

போசான் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தானில் இப்போது நிலவும் தக்காளி மற்றும் வெங்காய பற்றாக்குறையானது சில நாட்களில் சரிசெய்யப்படும், பலுசிஸ்தானில் இருந்து விளைச்சல் பொருட்கள் வந்ததும் நிலை சரியாகும். இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான்  காய்கறிகளை வாங்காது என கூறிஉள்ளார். லாகூர் உள்பட பஞ்சாப் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை ரூ. 300 ஆக உள்ளது என டான் செய்தி வெளியிட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 100-120க்கு விற்பனையான தக்காளியின் விலை இப்போது ரூ. 300ஐ எட்டி உள்ளது. 

அரசு இப்போது ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 132- 140 என நிர்ணயம் செய்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

லாகூர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் அப்துல் பாசித், இந்தியாவிடம் இருந்து வாங்க மாட்டோம் என மந்திரி ஷிகந்தர் ஹயாத் போசான் அறிவித்து உள்ளதை பாராட்டிஉள்ளார். பாகிஸ்தானிடம் நாட்டு மக்களுக்கு உணவளிக்க வளங்கள் உள்ளது என குறிப்பிட்டு உள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தியதால் இருநாடுகள் இடையிலான உறவில் விரிசல் காணப்படுகிறது. பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காத வரையில் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என இந்தியா தெரிவித்துவிட்டது. 

Next Story